24xnews සිංහල

සත්යය! අවංකව !! මධ්යස්ථ අපගේ අරමුණ !!!

December 2016

குறிப்பு: ஆங்கிலப் பதிவின் கீழ் பகுதியில் தமிழ் இணைப்பு உள்ளது.

'ஒரு தனிமை தொழிலாளி:' -தமது முகநூல் பதிவில் மனதை நெகிழவைத்த சிங்கை பிரதமர்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தம்முடைய முகநூலில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அது குறித்து மனம் திறந்து கூறிய கருத்துகள் சிங்கப்பூர் பிரஜைகள் மற்றும் அன்னியத் தொழிலாளர்கள் ஆகிய தரப்பைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோரின் மனதை நெகிழவைத்துள்ளது.

புத்தாண்டு வாரக் கடைசியில் சாங்கி கடலோரத்தில் காலாற நடந்து கொண்டிருந்த போது இந்தக் காட்சியைத் தாம் கண்டதாக படம் ஒன்றை அவர் தமது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

கடலோரத்தில் ஒருவர், ஒரு மரத்தடியில் மிகவும் தனிமைப்பட்ட நிலையில் கைத்தொலைபேசியை இயக்கியவாறு அமர்ந்திருக்கும் காட்சி அது.

"கடலோரத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் சற்று தொலைவில் ஒருவர் மரத்தடியில் தனிமையில் அமர்ந்திருந்தார். ஆனாலும் அது தனிமை அல்ல... அவர் கையில் இருந்த போனில் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஓர் அன்னியத் தொழிலாளியாகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன்" என்று பிரதமர் லீ சியென் லூங் குறிப்பிட்டிருக்கிறார்.

"நாமெல்லாம் நமது விழாக் காலத்தை நம்முடைய குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகிறோம். இந்த வேளை யில் இங்கு பணிபுரியும் அன்னிய தொழிலாளர்களையும் நான் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.  தொலைதூரத்து மண்ணில், வேலை செய்வதற்காக குடும்பத்தினரை அங்கே விட்டுவிட்டு அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

இண்டர்நெட்டும் கைத்தொலைபேசியும் தங்கள் குடும்பத்தினருடன் அவர்களை இறுக இணைத்துக் கொண்டிருப்பது ஒரு நல்ல அம்சம் என லாம். தங்களின் நேசத்திற்குரியவர்களைப் பிரிந்து அவர்கள் வெகு தூரத்தில் இருப்பதாக கருதாமல் இருக்க, இது அவர்களுக்கு உதவி இருக்கிறது." என்று தமது முகநூல் பதிவில் பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சிங்கப்பூரியர்களே, இத்தகைய அன்னியத் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டிப் போற்றுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அது மட்டுமின்றி, கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரையும் அவர்கள் சேமித்து, தாயகத்திலுள்ள   தங்களின் குடும்பத்தி னரை எப்படியெல்லாம் காப்பாற்றி வருகின்றனர் என்பதை சிங்கப்பூரியர்கள் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்  என்று அவர் வலியுறுத்தினார்.

அவர்கள். நம்முடைய அடுக்கு மாடி வீடுகளையும் எம்ஆர்டி ரயில் பாதைகளையும் உருவாக்கியவர்கள். நமது சாலைகளையும் பூங்காக்க ளையும் தூய்மையாகவும் பசுமையாகவும் பாதுகாத்து வருபவர்கள். நம்முடைய குழந்தைகளையும் முதியவர்களையும் பேணி பராமரிப்ப வர்கள் என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

அவரது இந்த முகநூல் பதிவை சிங்கப்பூரியர்களும் அங்கு வேலைசெய்யும் அன்னியத் தொழிலாளர்களும் பல ஆயிரக்கணக்கான தங்களது சொந்த முகநூல் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்...,. பாராட்டியுள்ளனர்....

"எங்கள் மீது அன்பும் அக்கரையும் பாராட்டுகின்ற உங்களின் (பிரதமர் லீ) நல்ல மனது எங்களை நெகிழ வைத்திருக்கிறது என்று சில அன்னியத் தொழிலாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

அதேவேளையில், பல முதலாளிகள் தங்களின் உழைப்பை மதிப்பதே இல்லை. விழா நாள்களில் கூட, எங்கள் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பதில்லை என்று தங்களின் ஆதங்கங்களையும் பதிவிட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து #நீதிமன்றம் உத்தரவு

ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி அரேபியா நீதிமன்றம்(Criminal Court in Riyadh) தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 30 #சவுதி அரேபியா குடிமக்கள் ,ஒரு #ஈரான், ஒரு #ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என 32 நபர்களை இதே குற்றச்சாட்டில் போலீசார் இவர்களை கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சவுதி அரேபியாவில் உள்ள(Criminal Court in Riyadh) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.கடந்த10 மாதங்களாக சுமார் 160 முறை விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில், ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி அரேபியா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இதில் சவுதியின் இராணுவ இரகசியங்கள்
படை வீரர்கள், விமானங்கள் ஆகியவற்றை பற்றி முக்கிய தகவல்களை திருடி ஈரான் அரசுக்கு கொடுத்து பெரும் தொகையினை லஞ்சமாகவும் பெற்றனர்.

மீதமுள்ள 17 நபர்களுக்கு மீதுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் 6 மாதம் முதல் 25 வருடங்கள் வரையில் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை Al-Riyadh newspaper செய்திகளை மேற்கோள் காட்டி Arab News செய்தி வெளியிட்டுள்ளது.
Photo:பதிவுக்காக மட்டுமே 
தமிழாக்கம் :Kuwait-தமிழ் பசங்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget