24xnews සිංහල

සත්යය! අවංකව !! මධ්යස්ථ අපගේ අරමුණ !!!

குறிப்பு: ஆங்கிலப் பதிவின் கீழ் பகுதியில் தமிழ் இணைப்பு உள்ளது.

சவுதி அரேபியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை

சவுதி அரேபியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து #நீதிமன்றம் உத்தரவு

ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி அரேபியா நீதிமன்றம்(Criminal Court in Riyadh) தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 30 #சவுதி அரேபியா குடிமக்கள் ,ஒரு #ஈரான், ஒரு #ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என 32 நபர்களை இதே குற்றச்சாட்டில் போலீசார் இவர்களை கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சவுதி அரேபியாவில் உள்ள(Criminal Court in Riyadh) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.கடந்த10 மாதங்களாக சுமார் 160 முறை விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில், ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி அரேபியா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இதில் சவுதியின் இராணுவ இரகசியங்கள்
படை வீரர்கள், விமானங்கள் ஆகியவற்றை பற்றி முக்கிய தகவல்களை திருடி ஈரான் அரசுக்கு கொடுத்து பெரும் தொகையினை லஞ்சமாகவும் பெற்றனர்.

மீதமுள்ள 17 நபர்களுக்கு மீதுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் 6 மாதம் முதல் 25 வருடங்கள் வரையில் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை Al-Riyadh newspaper செய்திகளை மேற்கோள் காட்டி Arab News செய்தி வெளியிட்டுள்ளது.
Photo:பதிவுக்காக மட்டுமே 
தமிழாக்கம் :Kuwait-தமிழ் பசங்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்

Post a Comment


Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget